Thursday, March 26, 2009

ஆறு கோடி பேர்

அது ஒரு பள்ளி கூடமாய் இருக்க வேண்டும், முதல் மாடி என்று நினைக்கிறேன், கூட்டமாய் நின்று இருந்தார்கள். குறைந்தது முப்பது பேர் இருப்பார்கள்.

அது ஒரு வகுப்பறை, மூலையில் ஒருவன் சரிந்து உட்கார்ந்து இருந்தான், எல்லோர் கண்களிலும் வெறி, கூச்சலில் வார்த்தைகள் புரிய வில்லை, நான் முன்னேறினேன், உள் நுழைந்தேன்....

வெறியோடு தாக்கி கொண்டு இருந்தார்கள்

" கொல்லு, கொல்லுடா அவனை "

ஒருவன் ஏறி காலால் மிதித்து கொண்டு இருந்தான்.

நான் " நிறுத்துங்கள் யார் இவன்? "

என் குரல் கொஞ்சம் கணீர் வகை ! எல்லோரும் என்னை பார்த்தார்கள்

" இவன் சிங்களன் "

" அதனால் என்ன? மனிதன் தானே? "

நான் குனிந்து அவனை பார்த்தேன், முகம் வீங்கி, உதடு கிழிந்து, தரை பார்த்து இருந்தான்

" அரசாங்கம் செய்யும் தவறுக்கு இவன் பலியா? "

" தண்ணி குடுங்கபா "

யாரிடமும் அசைவில்லை !

பல குரல்கள் பதிலாய், அதில் ஒன்று " அப்போ தமிழ்ர்கள் மட்டும் பலியாகலாம் கேட்பரில்லையோ ? "

என்ன செய்வது கோபம், எல்லோருக்கும் கோபம்

" சரி விடப்பா! எழுந்திரு "

" அங்கே தமிழர்களை வதைத்தால் கிடைக்கும் சிங்களனை இவர்கள் வதைகிறார்கள்"

" இரண்டுமே தவறில்லையா? " நான் நடு நிலைமை பேசினேன்

" நாடு இருவருக்கும் பொது தானே! "

அவன் என்னை பார்க்க வில்லை, தரையை பார்த்து " அது எங்கள் நாடு ! நீங்கள் தமிழ் நாட்டில் இருந்து வந்தவர்கள், நீங்கள் போய் விட்டால் ஏன் பிரச்னை ? "

இவ்வளவு கூட்டத்தில் நான் இந்த பதிலை எதிர் பார்க்கவில்லை !
தைரியம்... எங்கிருந்து வந்தது ? கேள்வி கேட்கிறான்
இப்படி பேசி தான் உதை வாங்கி இருக்கிறானோ ?

நான் சமாதானமாய்
" உங்கள் மகா வம்சமே கூறுகிறது நீங்கள் வங்கத்தில் இருந்து வந்தவர்கள் என்று"
அப்படி என்றல் நீங்கள் மண்ணின் மைந்தர்கள் இல்லை, சரி யார் முதலின் போனது ? ராமேஸ்வரத்தில் இருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கும் நாங்களா ? இல்லை மூவாயிரம் மயில்களுக்கு அப்பால் உள்ள நீங்களா ? "

" பொய் சொல்ல உங்களுக்கு வெட்கமாய் இல்லை ? "

அவன் என்னை பார்க்க வில்லை, குனிந்து கொண்டே " நாங்கள் தான் பெரும்பான்மை இங்கே ! முடிந்தால் சிறுபான்மை தமிழர் அனுசரித்து போக வேண்டும்! பிரச்சனை செய்தால் அரசாங்கம் என்ன செய்யும் ? "

அவன் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை அங்கே !!!!

அவன் " சிங்களர் ரெண்டு கோடிக்கும் மேல், நீங்கள் வெறும் ஐம்பது லட்சம் "

எனக்கு ரத்தம் தலைகேறியது !

" என்ன சொன்னே? நாங்கள் சிறுபான்மையா ? 1950௦ இல் தமிழர்கள் ஐம்பது லட்சம் பேர், சிங்களர் ஐம்பது லட்சம் பேர் "

" ஐம்பது வருடம் ஓடிவிட்டது இப்போ நீங்கள் ரெண்டு கோடி பேர் ஆனால் தமிழர்கள் மட்டும் இன்னும் ஐம்பது லட்சம் எப்படி ? "

" ஐம்பது வருடமாய் அங்கே யாருக்கும் குழந்தை பிறக்கலியா? அங்கே தமிழ் பெண்கள் வயசுக்கு வரலியா? இல்ல எந்த தமிழனுக்கும் ஆண்மையே இல்லியா? "

அவன் லேசாக தலை திருப்பினான், ஓர கண்ணால் என்னை பார்த்தான்!
" எனக்கெப்படி தெரியும் ?" அவன் பார்வையில் ஏளனம் குடி கொண்டிருந்தது !

நான் நிதானத்தை இழந்தேன்! என்னை கட்டு படுத்த முடிய வில்லை !

" பாவிகளா ! தோட்டத்தில் செடி வளர்த்து அழகுக்கு வெட்டி வெட்டி அதை மரமாக விடாமல் செய்வது போல் ஒரு இனத்தையே வாழ விடாமல் செய்து விட்டீர்களே ! நாங்கள் சிறுபான்மையா ? "

" தெரிஞ்சிக்கோ! நாங்கள் ஐந்து கோடி தமிழர்கள் கூப்பிடு துரத்தில் இருக்கிறோம்! உலக தமிழர்கள் ஒரு கோடி பேர் உலகம் எங்கும் இருகிறார்கள் ! நாங்க நெனச்சோம் வேரறுத்து விடுவோம், நீங்க வெறும் ரெண்டு கோடிடா நாங்கள் ஆறு கோடி "

" புல் பூண்டு கூட இருக்காது உன் தேசத்தில்! "

" கும்பிடும் சாமிக்கு கூட கைல வேல் கம்பு வீச்சருவா குடுக்குற கூட்டம் எங்க கூட்டம் ! எங்களையா ஆண்மை இல்லாதவங்கன்னு சொன்ன? "

என் கைகள் முறுக்கேறின, நான் வெறி கொண்டவனை தாக்கி கொண்டிருந்தேன், கத்தி கொண்டே

" நாங்க ஆறு கோடி பேருடா, ஆறு கோடி பேர் "

" என்னங்க! என்னங்க! "

இருட்டில் என் மனைவி சுவிட்சை தேடி போட்டாள்! விளக்கு வெளிச்சம் கண் கூசியது, என் கைகள் முறுக்கி கொண்டு இருந்தது! கண்கள் சிவந்து போய் படுக்கையில் உட்கார்ந்த படியே நான்.

" என்னங்க ஒரே தொந்தரவா போச்சி ! நடு ராத்திரியில் எழுந்து ஒக்கார்ந்து கிட்டு ஆறு கோடி எட்டு கோடி இன்னு கிட்டு !"

" எங்கனா தூங்க உடரிங்களா ! எனக்குன்னு வந்து வாச்சிங்களே ! நீங்க ஒருத்தர் தாங்க இப்படி "

நான் அவளை திரும்பி பார்த்தேன், அவள் முனகி கொண்டே தூங்கி விட்டிருந்தாள்...

" நாங்க ஒருத்தர் இல்லடி ஆறு கோடி பேர் " தனியாய் இருட்டில் விட்டத்தை பார்த்துக்கொண்டே நான்.