Tuesday, June 25, 2013

டாடி எனக்கொரு டவுட்டு


நிலவில் முதலில் கால் வைத்த மனிதன் யார் ?
அமெரிக்காவை சேர்ந்த ஆம்ஸ்ராங் மற்றும் அல்டரின் என்ற இரு விஞ்ஞானிகள் கி பி 1969 ஆம் ஆண்டு நிலவில் இறங்கினர். ஆம்ஸ்ராங் முதலில் இறங்கி, நிலவில் கால் வைத்த  முதல் மனிதன் என்ற பெருமையை பெற்றார்.

நிலவில் உயிரினங்கள் உண்டா ?
நிலவில் காற்றும் நீரும் கிடையாது, அதனால்அங்கு உயிரினங்கள் வாழ முடியாது

என்னங்க அஞ்சாம்  கிளாஸ் பாட புத்தகம் மாதிரி இருக்குதா ?
நாங்க எல்லாம் சின்ன வயசுல இப்புடி தாங்க  படிச்சோம், நீங்களும்  இப்புடி தான் படிச்சிருப்பிங்க. ஏன் உலகமே இப்புடி தான் படிச்சிருக்கும். இதெல்லாம் யாரு கண்டுபுடிச்சி சொன்னா ? அமெரிக்கா ............?

அவுக சொன்னாக நாம அப்புடியே ஏத்துகிட்டோம். ரொம்ப நாளக்கி அப்புறம் இந்தியான்னு ஒரு ஏழை நாடு 2008 டுல ஒரு சின்ன செயற்கை கொள அனுப்பி நிலாவ ஒரு 100 கிலோ மீட்டர் துரதுல இருந்தே ஆராஞ்சி படம் புடிச்சி அனுப்புச்சி.

அத பாத்த இந்திய விஞ்ஞானிக அட அதுல தண்ணி ஐஸா ஓரஞ்சி கட்டி கட்டியா இருக்குறத கண்டுபுடிசங்க.

 இங்கன தாங்க  எனக்கொரு  சந்தேகம் ?


இதனை வருசமா ராகெட்ட அனுப்பி ஏன்  ஆளையே அனுப்பி பாத்துட்டு தானே அங்க பிராண வாயு கிடையாது, தண்ணி கிடையாது இன்னு அமெரிக்கா சொல்லுச்சி, ஒலகமே பாட புத்தகத்துல ரொப்பி வச்சிக்கிட்டு படிச்சிச்சி.


100 கிலோ மீட்டர் துரதுல  செயற்கை கொள அனுப்பி இந்தியாவல தண்ணி கண்டு புடிக்க  முடியுதுன்னா . அம்பது வருசத்துக்கு முன்னாடியே  மனுசனை நிலவுக்கு நேரா அனுபிச்ச அவுகலாலே  ஏன் முடியலே.
நெலவுலெ உயிர் இல்ல இன்னு சொல்ல முக்கிய காரணம் தண்ணி கிடையாது. தண்ணீர் இருந்தால் அதுல மூனுல ஒரு பங்கு பிராண வாயு.  சூரியன் பட்டா  ஆடோமாடிக்கா ஆவியாகி பிராண வாயு வந்துரும். இப்போ தண்ணி இருக்குதுன்னா, இவுளோ நாளா அமெரிக்க சொன்னது  பொய்யா ?

இங்கன  தாங்க  எனக்கொரு  சந்தேகம் ?

மொதல்ல அமெரிக்க ஆளை அனுப்புனது உண்மையா ?
ஏன் கேக்குறேன்னா ?

அமெரிக்கா அமர்களமா ஆளெல்லாம் அனுபிச்சி ஒலகம் பூரா அத ஒளிபரப்பி, நான்தான் வல்லரசு இன்னு தம்பட்டம் அடிச்சபோது அத நம்ப முடியாத நாடுகள் " அதெல்லாம் சரிதான் அந்த ஒளிபரப்புன ரீல கொஞ்சம் கொடுங்க, நாங்க பரிசோதன பண்ணி சொல்றோமுன்னங்க "

அதுக்கு அமெரிக்கா சொன்ன பதில் இருக்கே

"படமெல்லாம் எடுத்து ஒளிபரப்பிட்டு இங்க தாங்க  வெச்சிருந்தோம், அது எப்புடி காணாம போச்சின்னு தான் தெரியல "

எது எது? வரலாற்றிலேயே முக்கியமான நிகழ்வு, நிலால மனிதன் கால் வெச்சது. அத ஏதோ அப்பள கட்ட காணோமுன்ற மாதிரி சொல்றத நம்பவாங்க முடியிது ?

இங்கன  தாங்க  எனக்கொரு  சந்தேகம் ?

நாமெல்லாம் ஒருதடவ புது எடத்துக்கு போனாலே பத்துவாட்டி பங்காளிங்கள எல்லாம் மறுபடியும் கூட்டிகிட்டு போவோம். ஆனா அமெரிக்கா அம்பது வருசமாகியும்  போகவே இல்லையே ஏன் ?

இங்கன  தாங்க " டாடி எனக்கொரு டவுட்டு " அபுடீன்னு சந்தேகம் ?

இந்தியா  ஒரு சின்ன செயற்கை கொள அனுப்பி தண்ணி இருக்குன்னு சொன்ன வொடனே, அவசர அவசரமா ஒரு குண்ட போட்டு ஆமா ஆமா தண்ணி இருக்குன்னு சொன்னா ? இம்புட்டு வருசமா அமெரிக்கா இன்னாங்க பண்ணிக்கிட்டு இருந்துது ?

ஆனா அவனுக  சொல்றதுதான் தான் அறிவியல், ஆராய்ச்சி, விஞ்ஞானம் முன்னு நாம வாய பொளந்துகிட்டு கேட்டுகிட்டு இருக்கோம்.

எனக்கென்னமோ இது நாள் வரைக்கும் என் அஞ்சாம் கிளாஸ் புக்குல அமெரிக்கா அசிங்கம் பண்ணதா தாங்க தோணுது

அதெல்லாம் சரி இம்புட்டு வெவரமா கேள்வி கேக்குறியேடா வெளங்காத பயலே ! நீ சொன்ன தகவல் எல்லாம் உண்மையான்னு கேட்டா ?

என்ன ஏம்முல்ல கேக்குற, என்ன ஏன் கேக்கன்கிறேன் 


Thursday, March 7, 2013

தேச பற்றுள்ள மனிதன் இறந்த நாள்




" ஹீஉகோ சாவேஸ் "

 இந்த பெயர் வாயில் நுழைய வில்லை,

யார் இந்த மனிதன் என்று எந்த எதிர் பரப்பும் இல்லாமல் தான் அவரை படிக்க ஆரம்பித்தேன்,

ஒரு தனி மனிதன் நாட்டையும் மக்களையும் உண்மையை நேசித்தால், அவர்களுக்காக உயிரையும் துச்சமென மதித்து போராடினால்

மக்கள் அவனை (அவரை ) காப்பாற்றி,
கொண்டாடி,
தலைவனாக்கி
அவரால் அந்த நாடே செழித்து
ஊழல் ஒழிந்து
அரசு பணம் முதலாளிகள் கையில் சிக்காமல்
 பொது சேவைக்கு பயன்பட்டு

அந்நிய சதியால் காணமல் போய்,
 மக்களே திரண்டு காப்பாற்றி
 மீண்டும் அரசனாகி

என்ன சினிமா கதை போல் இருக்குதா?
நம்ப முடிய வில்லையா ?

நானும் தான் நம்ப வில்லை, நாள் பூரா இவரையே யோசித்து கொண்டிருந்தேன்,

இப்படி ஒரு மனிதரா, சாத்தியமா ?

வெனிசுலவெ மக்கள் புண்ணியம் செய்தவர்கள்,

ஹும் நாமும் தான் இருக்கிறோம் சுதந்திரம் பெற்று அறுபது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது,

அட போங்கபா, நமக்கெல்லாம் விமோசனமே கிடையாது,

வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம் ஏதோ வெனிசுலவெ மக்களாவது நல்ல இருக்கட்டும், ஒரு முதுகெலும்பு உள்ள தலைவர் கேடசிருக்கர் இன்னு நெனெச்சேன்

அது பொறுக்கலையா ஆண்டவனுக்கு!

மனசே சரியில்ல

ஆண்டவா இனிமேலாவது மக்களுக்காக வாழும் நல்ல மனிதர்களை பூமியில் விட்டு வை

Friday, April 6, 2012

மக்கு மணிவண்ணன்


இந்தா போட்டோல இருக்குறவன உங்க யாருகாவது தெரியுமா ? நல்ல கேள்வி... எனக்கே தெரியாத போது உங்கள கேக்குறது ஞயாயம் இல்லை தான்
இருந்தாலும் கேக்குறேன்...

தெரியாது சரி ஒத்துக்குறேன்... ப்ளாகுல போட்டோ போடற அளவுக்கு இவரு பெரிய ஆளா ? இல்ல சப்ப மேட்ரு தான்.. அப்ப எதுக்கு இவருக்கு வெளம்பரம்

கேக்கணுமுல்ல, கேக்கணுமுல்ல, சரி சொலுறேன் , இவரு சாதா மேட்டருதான் ஆனா இப்போ ஸ்பெஷல் சாதா ஆயிட்டாரு எப்புடி ?

அதாவது நாம எல்லாமே சாதா மேட்டருதான், அப்படி இருக்குறப்போ இவரு மட்டும் தற்கொல பண்ணிக்கிட்டு ஸ்பெஷல் சாதா ஆயிட்டாரு

ஒடனே கேள்வி வருமே ... ஏன் தற்கொல பண்ணிகிட்டாறு ?

அட ஏனப்பா நீ வெவரமே புரியாம... ஒரு பையன் இருவதியாறு பாடத்துல பெயில் ஆனா தற்கொல பண்ணிக்காம சந்தோசமா சுத்தியா  வர முடியும்  ?
( நாம எல்லாம் எப்புடி எப்புடி எல்லாம் பெயில் ஆகி இருக்கோம் என்னென்ன மாதிரி எல்லாம் பெயில் ஆகியிருக்கோம், இந்த புள்ள நம்மளயெல்லாம் பாத்ததே இல்ல போல  )
 அதுலயும் இந்தியாவின் மிக சிறந்த பல்கலை கழகத்துல படிச்சிட்டு பெயில் ஆனா தற்கொல பண்ணிக்காம  என்ன பண்றது.

அதாவது மக்களே இந்த மக்கு மணிவண்ணன் அண்ணா யுனிவெர்சிட்டி இல்ல அண்ணா யுனிவெர்சிட்டி அதுல மூணாப்பு படிக்கிறானாம் (அதாம்பா  மூணாவது வருஷம் )
அதுல இருவதியாறு பாடத்துல பெயில், இந்த மக்கு பசங்க எல்லாம் இருந்தா என்ன இல்லாம போனா என்ன. இப்புடி பட்ட மக்கு பசங்க எல்லாம் எதுக்கு  அண்ணா யுனிவெர்சிட்டி மாதிரி
பெரிய படிப்பு படிக்கிற எடத்துக்கு எல்லாம் வராங்க, அண்ணா யுனிவெர்சிட்டி, ஐ ஐ டி,  ஐ ஐ எம் ஐ ஐ எஸ் சி எல்லாம் இந்த மாதிரி மக்கு பசங்க படிக்கவ கட்டி வெச்சி இருக்கு

அதுக்குன்னு  புத்திசாலி பசங்க தனியா இருக்குறாங்க அவுங்கள தயார் பண்றதுக்குன்னே தனியா பள்ளி கூடம் இருக்கு... இப்படி இருக்குறப்போ இந்த மக்கு மணிவண்ணன் எல்லாம்
தேவையில்லாம வந்து சீட்ட புடிச்சா என்ன ஆவும், பேராச புடிச்சா இப்புடி தான் ஆவும்...

நான் தெரியாம தான் கேக்குறேன் இவனுக்கு எல்லாம் எதுக்கு இன்ஜினியரிங் படிப்பு ஒரு பி எ வோ ஒரு பி கா மோ படிச்சிட்டு குமாஸ்தா வேலக்கி போகம எதுக்கு இன்ஜினியரிங் படிப்பு.

நீ தமிழ்ல தானே படிச்சே... தமிழ்ல தானே படிச்சே அப்போ குமாஸ்தா வேலைக்கோ வாத்தியார் வேலைக்கோ தானே போகணும். எதுக்கு மெட்ரிக் குலேசன் சி பி எஸ் இ படிச்சா மாதிரி இஞ்சினீர்  ஆவனமுன்னு கனவு.
(எனக்கு தெரிஞ்சி " கோ இன் சயிட் லேடீஸ் ஆர் அவைலபெல் " அப்புடின்னு சொன்ன எச் ஒ டி யா பாத்து அசந்து போயிருக்கேன், நாங்க பேசாம உள்ள போயிட்டோம் அப்புறம் விசாரிச்சப்ப தான் தெரிஞ்சிது
பொம்பள பசங்க எல்லாம் கிளாசுல இருக்கப்போ ஆம்புள பசங்க ஏன் வெளிய நிக்கிறிங்க உள்ள போங்கன்னு சொன்னாராம், அதுக்காக  அவுரு படிச்ச பி டேக் எம் பில் தப்புன்னோ பாடத்துல அவரு மக்குன்னோ சொல்ல மாட்டேன், அவருக்கு இங்கிலீசு தெரியலை அவளோதான் )

ஏங்க நான் கேக்குறது தப்பா? இந்த பையன் மணிவண்ணன் எங்கியோ தர்ம புரில ஒரு எழபட்ட வீட்டுல பொறந்து தமிழ் மீடியம் ஸ்கூலுல படிச்சி வந்துருக்காம்.

அங்க என்ன இன்ஜினியரிங் காலேஜி மாதிரி இங்கிலீசுலய சொல்லி குடுக்குறாங்க... இல்ல எட்டாப்பு படிக்கும் போதே ப்ரோஜெக்டு வோருக்கு குடுக்குராகளா...

பத்தாப்பு பாடத்த ஓம்பதாவுலியே முடிச்சி பத்தாப்பு பூரா வெறும் டெஸ்டு வெச்சி பிளஸ் டூ பரிச்சைக்கு பிளஸ் ஒன் லையே பாடத்த முடிச்சி எம்புட்டு கழ்டபட்டு பசங்கள தயார் பண்றாங்க...
அதுக்கு எம்புட்டு செலவாவுது... பன்னண்டு மாச படிப்ப இருவத்தி ரெண்டு மாசமா இழுத்து பசங்க எல்லாத்தையுமே தொன்னுருக்கு மேல வாங்க வெச்சி ஆயிர கணக்குல பீசு வாங்கி...

இப்புடி எதுவுமே பண்ணாம நீ பாட்டுக்கு கிராமத்து ஸ்கூலுல படிச்சிட்டு திடீருன்னு வந்து  இன்ஜினியரிங் காலேஜில குதிச்சா இப்புடித்தான் ஆவும்.

கூட படிக்கிற பசங்க கூட இங்கிலீசுல பேசவும் முடியாது, ப்ரஜக்டு வோருக்கு இன்னா என்னன்னும் தெரியாது ஆனா ஆறுமாசத்துல ஆறு பேப்பர் எக்சாமுன்னா இப்புடித்தான் இருவதியாறு பாடத்துல பெயில் ஆகா வேண்டி இருக்கும்...

உன்னோட மக்கு மரமண்டைக்கு இன்ஜினியரிங் காலேஜி சேந்த பொறவுதான் இது எல்லாம் புரிஞ்சா அது யாரு தப்பு ?

எல் கே ஜி அட்மிசன் பீசு தெரியுமா உனுக்கு... உங்க அப்ப அம்மா எக்ஸாமு எழுதி இருக்கங்களா ( நீ படிக்க )... லட்ச கணக்குல பீசு கட்டியிருக்கியா...

இன்ஜினியரிங் டாக்குடரு படிப்ப எல்லாம் அப்பவே ஆரம்பிச்சி இருக்கணும்... இல்லையா ஏதோ ஒரு மூணா வானா காலேஜில போயி பேருக்கு இன்ஜினியரிங் படிச்சி இருக்கணும்

அதெல்லாம் விட்டு போட்டு மகா புத்தி சாலிகள் உருவாகுறதா இந்திய பூரா சொல்லுறாங்களே  அந்த எடத்துக்கு எல்லாம் உன்ன யாரு வர சொன்னா ?

என்னா என்னா கேட்ட? அப்போ பன்னண்டு வருசமா நீ படிச்சது என்னன்னா ?

ஸ்டேட்டு போர்டு படிப்புக்கும் இதுக்கும் ஏன் இவ்வளோ வித்தியசமுன்னா... ஆதஏன் என்ன கேக்க ? ஆதஏன்ல  என்ன கேக்க ?

ஏன் எல்லோருக்கும் சமமான படிப்பு ஸ்கூல்லயே இருக்க கூடாதுன்னா ? ஆதஏன்ல  என்ன கேக்க ?

பிளஸ் டூல  1156 மார்க்கு ஸ்டேட்டுல பதிமூனா ரேஞ்க்கு எடுத்தும் இன்ஜினியரிங் படிக்க முடியலேன்னா ஏன்ல என்ன கேக்க ?

எதுக்கு ஸ்டேட் போர்டு, சென்ட்ரல் போர்டு, மெட்ரிக் குலேசன் தமிழ் மீடியம் இங்கிலீஸ் மீடியம்ன்னு தனி தனியா ?
எல்லாருக்கும் ஒரே படிப்பு வெச்சா நா எதுக்கு தற்கொல பண்ணிக்கனும் ? கரக்டு..... ஆதஏன்ல  என்ன கேக்க ?

சமசீர் கல்வி .... நிறுத்து நிறுத்து என்ன வார்த்த சொன்ன..

நாங்க எல்லாம் அப்புடி தான் எல்லாத்தையும் தனி தனியா தான் வெச்சிருப்போம், தனி தனியா பீசு வாங்குவோம்

படிக்கும் போதே நீ ஏழ, அவன் பணக்காரன், நீ தமிழு அவன் இங்கிலீசு அப்பிடின்னு பிரிச்சி வெப்போம், என்னா பண்ணுவ ?

ஒவ்வொரு  வருசமும் ஐ ஐ டி,  ஐ ஐ எம் ஐ ஐ எஸ் சி ல உன்ன மாதிரி எத்தன பசங்க தற்கொல பண்ணிகிரனுங்க தெரியுமா

எந்த சேனலோ பேப்பரோ மீடியவோ இத ரொம்ப முக்கியமுன்னு அக்கறையா விவாதிச்சி இருக்கங்களா

பன்னிரெண்டாம் வகுப்பு வரை புத்தி சாலி என்று அறியப்பட்ட மாணவன் பட்டபடிப்பில் இருவத்தி மூன்று பாடத்தில் பெயில் ஆகி தற்கொலை செய்து கொண்டாரென்றால்

பண வெறி பிடித்த பாகுபாடான இந்த சமூகத்தில் வாழ நான் உண்மையில் வெட்க படுகிறேன்.....

இறந்து போனவர் தனிமனிதர் அல்ல இன்று படித்து முன்னேற துடிக்கும் ஒவ்வொரு மாணவரின் நிழல்

இந்த பதிவில் தவறான வார்த்தைகளால் நான் திட்டியது மணிவண்ணனை அல்ல என்னையும் சேர்த்து இந்த சமூகத்தை....

கையாலாகாத என்னை போன்ற சமூக அடிமைகளெல்லாம்  இப்படி எழுதுவதை தவிர வேறு என்ன பெரிதாய் புடிங்கி விட முடியும்...

இது வரை இறந்து போன மணிவண்ணன்களுக்கு என்  கண்ணீர் அஞ்சலிகள்

Saturday, March 31, 2012

கமிசனர் ஆப்பிசுலர்ந்து போன்

வீட்டுக்கு வந்த விருந்தினர் மகள் ஹாலில் விளையாடிக்கொண்டு இருந்தாள். தூரத்து உறவு பல வருடமாய் பெங்களூரில் செட்டிலாகி இத்தனை வருடம் கழித்து வந்திருக்கிறார்கள், அவர் கிட்ட எத்தன வாடி சொன்னாலும் மண்டைய மண்டைய ஆட்டிட்டு ஆபீசுக்கு கேளம்பிடறார்.

வாசல் மணி அடித்தது... வாசலை பார்த்தேன் நிழலாடியது, கதவருகில் கவனித்தேன் " ஹோ அந்த பையனா ? "

நினைவுகள் சில மாதங்கள் பின்னோக்கி அசை போட்டன. தங்கையும் தங்கச்சி வீட்டுகாரும் வந்திருந்த போது இப்படித்தான் வந்தான், தங்கச்சி வீட்டுகாரர் தான் கதவை திறந்தார்

 " சார் ஊதுவத்தி வாங்கிக்குங்க சார் "

 "வேணாப்பா வீட்டுல இருக்குது "

 " சார் ரெண்டாவது வங்கிக்கிங்க சார் பத்து ரூபா தான், எக்ஸாம் பீஸ் கட்டனும் இன்னிக்கி கடைசி நாள் "

கதவை சாத்த போனவர் நின்றார் " ஹ்ம்ம் என்ன படிக்கிற ? "

 "பாலிடெக்னிக் சார் செகண்ட் இயர் "

 " என்ன சப்ஜெக்ட் ?" " டிப்ளமா இன் எலெக்ட்ரிகல் சார் "

 " ப்ரூப் வெச்சிருக்கியா ? "

அவன் ஐடி கார்டை காண்பித்தான் வாங்கி கொஞ்சநேரம் அதையே திருப்பி திருப்பி பார்த்துகொண்டிருந்தார்... விழுப்புரத்தில் மணியம்மை பாலிடெக்னிக். ஐடி ஒரிஜினல் தான் அவன் போட்டோவும் இருந்தது.

பிறகு " எவளோ பீஸ் கட்டணுமுன்னு சொன்ன ?"

" எட்டுநூத்தி அம்பதுருபா சார்... "

" அது சரி வீடு எங்க சொன்னே ? " விழுப்புரம் பக்கத்தில் ஏதோ கிராமம் பேர் சொன்னான்.

" அப்போ ஊதுவத்தி விக்க விழுப்புரமே போதுமே, எதுக்கு பாண்டிக்கு வந்த ?"

" தெரிஞ்ச ருல விக்க வெக்கமா இருக்கு சார்... " கொஞ்ச நேரம் யோசித்தவர்.. .இரு வரேன்,

சென்று பர்சை எடுத்து வந்தார் ஐந்து நூறு ரூபாய் நோட்டுகள் இருந்தன... 

" அடடே ஐநுருதனே இருக்கு... இரு"

 திரும்ப சென்று பையை நோன்டியவர்

 " இந்தா இதுல ஒரு முன்னூறு இருக்கு மொத்தம் எட்டுநூறு..... அம்பது ருபாய் எங்கியாவது போரட்டிக்க " என்றார்.

அவன் காலில் விழுந்தான் " அட எந்திரி பா படிக்கிற பசங்க கால்ல போய் விழுந்துகிட்டு போய் படி, எப்ப உதவி வேணுமுன்னாலும் சொல்லு " என்றார்

அவன் சென்றவுடன் அவர் திரும்பி பின்னல் நின்ற என்னிடம் " பாக்க நல்ல பையனா தெரியறான் ? கார்டு ஒரிஜினல் தான் ? பாவம் படிக்கிற பசங்க வூட்டுல என்ன கஷ்டமோ ? "


 " என்ன சரோ இன்னக்கி கடைக்கு போகணுமுன்னு சொன்னா, நானும் சரின்னுடேன் இப்போ பர்சு காலி " சிரித்தார்

 " விடுங்க பசங்க படிப்புக்கு முன்னால நம்ப கழ்டமெல்லாம் பெரிசில்ல. நானெல்லாம் சின்ன வயசுல படிக்க ரொம்ப கஷ்டபட்டேன், இவனுக்காவது ஊதுவத்தி விக்க தோனுச்சி, அப்ப எனக்கு அது கூட தோணலை" அவர் சுய புராணம் பாடிகிட்டே உள்ளே சென்றார்.

அதற்கு பிறகு சில தடவை வந்தான் கையில்அதே ஊதுவத்தி , டெர்ம் பீஸ்க்கு புக்கு வாங்க என்று, என்னால் முடிந்த பணம் கொடுத்திருக்கிறேன். அவனை பார்த்தவுடன் கையில் காசில்லை என்பது ஞபகத்தில் உரைத்தது, எப்படியும் வீட்டுக்காரர் போன் பண்ணுவார், ஏற்கனவே சொல்லியிருக்கேன் விருந்தாளி வருவது பற்றி... அவரிடம் இருக்கும் பார்த்துக்கலாம் (அவர் அரசு கருவூலத்தில் கணக்கர் வேலை, பெரிசாய் இல்லை என்றாலும் நிலையான சம்பளம், இப்போ ரெண்டு வாரமா கமிசனர் ஆபிசில் போஸ்டிங் ஏதோ கணக்கு வழக்கு பாக்கனுமாம், அது வீட்டுல இருந்து கொஞ்சம் அருகில் இருந்தது, போக வர வசதி என்று சந்தோஷ பட்டு கொண்டார்.

நினைவுகளில் இருந்து திரும்பி யோசித்து கொண்டே கதவை திறக்க போனேன், போன் மணி அடித்தது,

 " அம்மு அந்த போன எடு "

 கதவை திறந்து " வா தம்பி எப்படி படிக்கிற ? "

 " நல்லா படிக்கிறேங்க ஆனுவல் பீஸ் கட்டனும் "

 "உள்ள வாப்பா தண்ணி குடிக்கிறியா ? உக்காரு "

அவன் சோபாவில் அமர்ந்தான் அதற்குள் அம்மு வந்தாள்

" ஆண்டி கமிசனர் ஆப்பிசுலர்ந்து போன் "

அவன் சட்டென்று என்னை நிமிர்ந்து பார்த்தான்

குடும்மா என்று வாங்கினேன் " ஹலோ சொல்லுங்க ஆமா நான் சொல்லல... ஆமா வந்துருகாங்க நீங்க வொடனே பத்து நிமிசத்துல இங்க வரிங்களா " என்ற படி தண்ணீர் எடுக்க சமயலறைக்கு போனேன்.

 செம்பில் தண்ணீர் மொண்டு கொண்டே " அந்த பையன் வந்துருக்காங்க நான் கூட சொல்லுவனே "
 " ஆமா கைல காசு இல்ல, பீஸ் கட்டணுமாம் நீங்க கொஞ்சம் வீட்டுக்கும் வாங்களேன் " என்று பேசிக்கொண்டே ஹாலுக்கு வந்தேன்

சோபா காலியாய் இருந்தது... சுற்றிலும் பார்த்தேன் அவனை காணவில்லை... விறு விறு என வாசலுக்கு வந்தேன். அவன் தெருவில் இறங்கி நடந்து கொண்டிருந்தான்...

 தம்பி என்று கூப்பிட்டேன், வேகமாய் நடக்க ஆரம்பித்தான்

" தம்பி "

அவன் தெருவில் ஓட ஆரம்பித்தான் ....

Friday, September 30, 2011

அக்கறை சீமை

பாரின் பாரின்னு சொல்லுரன்களே, அங்க போவேனுமுன்னு எல்லோருக்கும் ஆச தான், சரி அப்புடி என்ன தான் இருக்குமுன்னு போயி பாத்தா! அத எப்புடின்னு சொல்லுவேன் நீங்க ஆயிரம் தான் சொல்லுங்க பாரின் எப்பவுமே பாரின் தான், நான் மட்டும் பாத்தா எப்புடி நீங்களும் பாத்துட்டு சொல்லுங்க ==================================================================================== பாத்தீயலா எம்புட்டு அளகா இருக்கு ரோடெல்லாம்
================================================================================= தெருவோரம் காலாட்டி ஒக்கார கூட பித்தள பெஞ்சி, ஹும் நம்பள சொல்லுங்க
=================================================================================== இங்கயும் பொட்டி கடையா ? நம்ம ஊர் பக்கம் வந்துருபாங்களோ
=================================================================================== தெரு மொனயில செல பளபளன்னு, நம்ம ஊருலயும் தான் செல வேக்கிரணுங்க பாத்துக்குங்க பா
=================================================================================== இந்த ஊரு காக்காவெல்லாம் கக்காவே போவாதோ, எனக்கென்னமோ சந்தேகமாவே இருக்கு
=================================================================================== நம்ம ஊரு இளம்தாரி பயலுவ எல்லாம் பொம்பள புள்ளயலத்தான் லவ் பன்னுவாணுவ இது பாரின்
=================================================================================== பாரின்லையும் பிச்ச காரங்க இருக்காங்கப்பா சொன்ன நம்ப மாட்டிங்க இந்தா போட்டோவோட போட்டுட்டேன்
=================================================================================== ஏங்க அம்மணி ஊட்டுல இருந்து கெளம்புறப்ப எதையோ மறந்துட போல, நல்லா யோசிச்சி பாரு
உடுங்க மக்கா அது பாரின்ல படிச்ச புள்ள =================================================================================== எங்க ஊருல எல்லாம் மெடிக்கல் சாப்புல பாதுகாப்பு வாங்கவே ஆம்பளைங்க மண்டைய சொரிவங்க இந்த கடையில சாயங்காலமான கூட்டம் கூடுது பாருங்க
என்னத்த சொல்ல =================================================================================== அம்ப கானாம்! உட்டுடாங்கியளோ ?
=================================================================================== நல்ல காலம் அண்ணன் எளுந்தபுரம் போட்டோ எடுத்தேன் இல்லையின்ன உங்க எல்லார் கண்ணுமுள்ள அவுஞ்சி போயிருக்கும்

Friday, November 6, 2009

ஒரு தலை முறை மெல்ல மாறுகிறது

ஏதேதோ யோசனையில் நேரமாகி விட்டதால் பெங்களுரு செல்ல பேருந்து நிலையம் வந்தேன், இரவு பத்தே முக்கால் வண்டி, இன்னும் நேரமிருந்ததால் காத்திருந்தேன்,

யோசனைகள் எங்கோ சென்றன, வாழ்க்கை போராட்டம், படிப்பு, வேலை, பல ஊர்கள் அனுபவங்கள் என மெதுவாக அசைபோட்டேன்

நான் படித்து முடித்து வேலை தேடிய நேரம், என் அப்பாவின் நண்பர் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தார். பேச்சுக்கிடையே அவர் வேலை செய்யும் கம்பனியில் கம்ப்யூடர் தெரிந்த பட்டதாரிக்கு தேவை இருப்பதாகவும் சொன்னார். நான் உடனே வேலை தேடுவதாகவும் கம்ப்யூடர் தெரியும் என்றும் சொன்னேன். அவர் தர்ம சங்கடமாய் சிரித்தார் பிறகு அவர் கம்பனியில் அவரின் சாதிக்கு மட்டுமே முதலிடம் என்றும் (அது ஒரு பிரபலமான சிமெண்டு கம்பனி), கம்ப்யூடர் பற்றி தெரியா விட்டாலும் பரவாயில்லை ஆனால் அவர் சாதியாய் இருப்பது முக்கியம் என்றும், வேண்டும் என்றால் கம்பனியே கம்ப்யூடரில் பயிற்சி கொடுக்கும் என்றும் சொன்னார், எனவே இப்போதைக்கு அவரின் உறவுகார பையனுக்கு சொல்லி இருப்பதாகவும் சொன்னார்.

அந்த வயதில் என்னால் திறமையை விட சாதியை தான் முக்கியமாய் பார்கிறார்கள் என்ற எதார்த்தத்தை ஒத்துகொள்ள முடிய வில்லை. நகர் புறத்தில் வளர்ந்து சினிமாவில் மட்டுமே பார்த்த காட்சிகளை நேரில் பார்க்க மனம் மறுத்தது.

ஏன்? நான் படிக்க கல்லூரியில் இடம் தேடி அலைந்த போது, கல்லுரியில் இடமும் மற்றும் வருட பணமும் நாங்களே கட்டுவோம் நீ எங்கள் மதத்தில் சேர்ந்தால் என்றவர்களை நான் அறிவேன்.

இப்படி சாதியம் மதமும் வேரோடி சிதைந்த சமூகத்தில் சாதி கேட்காமல் திறமையை பார்ப்பதில் இந்த தொழில் நுட்ப கம்பனிகளுக்கு தான் முதலிடம் என நினைக்கிறேன்.

பத்து வருடங்களுக்கு முன்பு மருத்துவமும் பொறியியலும் பாமர மக்களுக்கு எட்டா படிப்புக்கள். ஒன்று அதீத புத்தியும் அல்லது அதீத பணமும் இருந்தால் மட்டுமே சாத்தியம். மற்றவர்கள் எல்லாம் என்ன படித்தாலும் குமாஸ்தா வேலை தான்.

எத்தனை கட்டுரைகள் இந்திய படிப்பு வெறும் குமாஸ்தாக்களை தான் உருவாக்கிக் கொண்டு இருக்கிறது என்று படித்திருக்கிறோம் மற்றும் அதை ஒத்துக்கொண்டும் இருக்கிறோம்,

அப்போது குமாஸ்தாக்களுக்கு என்ன சம்பளம்?, என்ன எதிர் காலம் ?

மூவாயிரம் ருபாய் சம்பளத்தில் காலத்தை முடித்தவர்கள் எத்தனை பேர் ?

இன்று தகவல் தொழில் நுட்பம் அதையும் விட்டு வைக்கவில்லை, ஐரோப்பாவில் ஒரு கணக்கர் செய்யும் வேலையை அதை விட பத்து மடங்கு குறைந்த சம்பளத்தில் ஒரு இந்தியர் செய்கிறார், அவர் சம்பளம் எடுத்தவுடன் பதினைந்து ஆயிரம், மூவாயிரம் சம்பளத்தில் இருந்து பதினைந்து ஆயிரம் சம்பளத்திற்கு நகர்ந்தவர்கள் நூறுபேரை எனக்கு தெரியும்.

யாரும் மேதாவி எழுத்தாளர்கள் எழுதுவது போல் குடித்துவிட்டு கூத்தடிக்க வில்லை(ஒரு பிரபல பத்திரிகையில் படித்தேன்), அவர்களின் குடும்ப தரத்தின் முன்னேற்றத்திற்கு அவர்கள் ஒரு முக்கிய தூணாகவே இருக்கிறார்கள், நடுத்தர மற்றும் கீழ் நிலை குடும்பங்கள் மெல்ல மாறுகின்றன.

மெதுவாய் ஒரு ஆரோக்யமான, நலமான குடும்ப சூழல்கள் உருவாகின்றன என்பதை கவனித்தீர்களா, கீழ் நடுத்தர வர்கங்கள் மெல்ல மேல் நடுத்தர வர்கங்களாய் மாறி குழ்ந்தைகளுக்கு நல்ல உணவும் நல்ல கல்வியும் கொடுக்க முடிகிறது என்பதை அறிவீர்களா?

தகவல் தொழில் நுட்ப துறையில் சம்பாதித்து யாரும் பெரிய பணக்காரர்கள் ஆகிவிட முடியாது
(வியாபாரிகளால் மட்டுமே முடியும் தற்போது உள்ள சூழ்நிலையில்)
ஆனால் ஒரு மேல் நடுத்தர வர்கங்களாய் மட்டுமே வாழ முடியும் என்பதாவது புரிகிறதா ?

ஒரு கிராமத்தில் படித்த ஒருவன் மருத்துவமோ பொறியியலோ படிக்க வசதி இல்லா விட்டாலும் ஒரு பி எஸ் சி படித்து சுலபமாய் தகவல் தொழில் நுட்ப துறையில் வேலை வாங்க முடிகிறது. அவன் ஒருவன் சம்பாத்தியத்தில் அவன் தங்கையோ தம்பியோ ஏன் அவன் குழந்தையோ நல்ல கல்வி பெற முடிகிறது என்கிற எதார்தமாவது புரிகிறதா ?

பெங்கலுரு பஸ் வந்ததும் ஏறி என் இருக்கையில் அமர்ந்தேன், அதில் ஏறிய பெரும்பாலனோர் வார விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து திரும்பி செல்வோர்,

என் அருகில் ஒரு பெரியவர் வந்தார், சிறிது நேர மவுனதிர்க்கு பிறகு " தம்பி என் மகள் பக்கத்துக்கு சீட்டு, நீ கொஞ்சம் மாறி உக்காரிருயா " என்றார்

நான் சிரித்துக்கொண்டே " நான் மாறி வேறு ஒரு ஆண் உட்கார்ந்தால் என்ன செய்வீர்கள் " என்றேன்

விழித்தார்

நான் " வேறு பெண்களுடன் ஆண் உட்காரும் இடத்தில மாற சொல்லுங்கள், உங்கள் பெண் அங்கே உட்காரலாம் " என்றேன்

அவர் மெல்ல தேடிக்கொண்டே சென்றார். அவருக்கு அறுவது வயதிருக்கும், கிராமத்து முகம், ஏழ்மையை தெளிவாய் தெரிவிக்கும் உடை. அவர் மகளை தேடினேன். கருத்த கிராமத்து முகம் உயர்தர ஜீன்சும் பிரபலமான கம்பனியின் பையை முதுகில் மாட்டி, கையில் வண்ண அலை பேசியுடன் நின்றிருந்தாள்.

அப்போதுதான் ஒவ்வொருவரையும் கவனித்தேன், ஓரிரண்டு பேரை தவிர மற்றவர்கள் கீழ் நடுத்தரவர்க வீடுகளிலிருந்து வந்தவர்கள் என்பதை உணர முடிகிறது.

இதை இதை தான் நான் சொல்ல முயற்சித்தேன். பத்து இருவது வருடத்திற்கு முன் எத்தனை பேர் வயதுக்கு வந்த பெண்ணை நம்பி மொழி தெரியாத ஊரில் வேலைக்கு அனுப்பினார்கள்? யோசித்து பாருங்கள்! நம்பிக்கை கொடுத்தது எது ?

அந்த ஒரு பெண்ணின் முன்னேற்றம் நிச்சயம் அவள் வீட்டை பாதிக்கும், அவளின் தாய்க்கும் தந்தைக்கும் ஒரு சுகதரமான வீட்டை உருவாக்கி கொடுக்கும் என்பதை மறுக்க முடியுமா ? அல்லது அவளின் தம்பிக்கோ தங்கைக்கோ நல்ல கல்வியை பெற்று கொடுக்கும் என்பதை மறுக்க முடியுமா ?

வரப்புயர நீர் உயரும் நீருயர நெல்லுயரும் எனபது நம் ஆன்றோர் வாக்கில்லயா

ஒரு தலை முறை மெல்ல மாறுகிறது, இதை நல்ல படியாய் முன்னெடுத்து செல்வது நம் கடமை இல்லையா ?

குறிப்பு : கீழ் மற்றும் நாடு தர குடும்பங்களின் நிலை தகவல் தொழில் நுட்ப துறை வளர்ச்சியால் மெல்ல மாறுகிறது என்று பதிவு செய்ய விரும்புகிறேன், கடந்த ஐம்பது வருடங்களில் எந்த அரசோ அல்லது துறையோ இந்த மக்களின் வளர்ச்சிக்கு எந்த உண்மையான முயற்சியும் செய்ததாய் நினைவில்லை, வேலை இல்லா திண்டாட்டமே சமூகத்தின் பல்வேறு சீரழிவுகளுக்கும் இளைஞர்களின் வாழ்வு சீரழிவுகளுக்கும் காரணமாய் இருந்ததை மறுக்க முடியாது. இப்போது ஏதோ ஒரு நாட்டின் நிறுவனங்களின் வீழ்ச்சி, நட்டங்களை தவிர்க்க நம் நாட்டில் கடை திறக்க, அதை எப்படி நல்ல வழியில் பயன் படுத்தி வீட்டையும் நாட்டையும் நம் குழ்ந்தை களின் எதிர் காலத்தை நல் வழி படுத்த யோசிக்க வேண்டுமே தவிர, இவர்கள் வளருகிறார்கள் அவர்கள் வளருகிறார்கள் என்று குறை சொல்வது நாம் எவ்வளவு எண்ண ஆரோக்கியம் இல்லாத சூழலில் வாழ்கிறோம் என்பதையே காட்டுகிறது.

இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்

தொழில் நுட்ப வளர்ச்சியும் சமூக சீர் கேடுகளும்

இந்த முறை பாண்டிசேரி சென்ற அனுபவம் மறக்க கொஞ்ச நாள் எடுக்கும் என நினைக்கிறேன். என் தூரத்து உறவினரை சந்தித்து பேசிக்கொண்டு இருந்தேன்.

அவர் சமீபத்தில் சென்னையில் இருந்து பாண்டிசேரி குடி பெயர்ந்தவர் (அந்த குடி இல்லை). அவர் கூறிய சில வாசகங்கள்:

" த்தா ...பசங்க வாடகை எல்லாம் ஏத்தி விட்டுடணுவ! மொதல்ல திருவாமூரில் ஆயிரம் ரூவா வாடகையில் இருந்தேன்! ரெண்டாயிரம் யெத்திட்டான்."

" அங்கருந்து போரூர் போனேன். ஒரு வருஷம் தான், நாலாயிரத்து ஐனுருணான்... கூடுவான் சேரி தண்டி போயிட்டேன். அங்கருந்து வேலைக்கி போவனும்! எத்தன வருஷம் தாக்கு புடிக்க? "

"வெலவாசி ஏறி போச்சி, முடியலை பேசாம வூருக்கே போயிடலாமுன்னு வூட்ட கட்டிகினு வூரோட வந்துட்டேன்."

" திடீர்ன்னு தம்மா தூண்டு பசங்க எல்லாம் முப்பதாயிரம் நாப்பதாயிரம் சம்பளம் வாங்கரனுங்க, எங்க இருந்து வரனுங்கன்னே தெரியல! இந்தி பேசறானுங்க, கேட்ட வாடக குடுகறனுங்க, கடசீல நம்ம போழப்புல மன்ன போடரனுங்க ...யா பசங்க" என்றார்

எனக்கு கேட்க ரொம்ப கழ்டமாக இருந்தது! ஒரு வளர்ச்சி எத்தனை ஏழை மக்களை பாதிக்கிறது! பேசவும் சங்கடமாக இருந்தது, ஆனாலும் பேச்சு தொடர்ந்தது , குடும்பத்தை பற்றி கேட்டேன், பிறகு சம்பாதிப்பது பற்றி திரும்பியது,

" எண்ணாங்க பண்றது எல்லாம் புரோக்கர் பண்ற வேலை! "

ஊரு தெரியாத பசங்கள நல்ல ஏமாத்தி வாடகைய ஏத்தி காமிச்சி, நல்லா கமிசன் பார்த்தாங்க! வூட்டு காரங்களும் காசு வருதுன்னு, இதுக்கு தோன போணாங்க!

"மெக்காநிக்கி, டைலறு ஏன் வுட்டு வேல செயிரவுங்க கூட சம்பாரிசாங்க பா"

அவர் தலையை ஆடினார், நான் விடாமல் தொடர்ந்தேன்

" எனக்கு தெரிந்து ஒரு அம்மா பல வருடம் வேளச்சேரியில் வீடு வேலை செய்தவர்கள், ரெண்டு வருசத்துல வீடு ப்ரோகரா நல்லா சம்பாரிசாங்க!

சொந்தமா வீடு கட்டி செங்கல்பட்டுல எடம் வாங்கி ஸ்கூடில போறாங்க இப்போ! உண்மையிலேயே அசந்துட்டேன்!

இன்னா காசு போரண்டுச்சு, அது தான் டைம், சூப்பரா சம்பாரிசாங்க " என்றேன்

அவர் " நான் கூட போன வருடம் ட்ரைவர் வேலைய விட்டுட்டு இரங்கினேன், அப்புறம் தான் பேருங்களதூரில் எடம் வாங்கி போட்டுடு, தோ ஊரோட வூட்ட கட்டிகினு வந்துட்டேன்" என்றார்.

அவர் முகத்தில், தானும் வெவரமாநவன் என்ற பெருமிதம் இருந்தது(நான் எதிர் பார்த்து இதை தான்),

மீண்டும் ரியல் எஸ்டேட் மேலே வராதா என்று ட்ரைவர் வேலைக்கும் போகாமல் காத்துக்கொண்டு இருக்கிறார். நிலம் பத்திரம் கமிஷன் என்ருதான் அவர் பேச்சு இருந்தது.

ரியல் எஸ்டேட் அடங்கியதால் தற்போது ஊரோடு இருக்கிறார் என்பது புரிந்தது.
பிறகு பேச்சை மாற்றி ஏதேதோ பேசினேன்,

ஆனால் மனதில் பத்து வருடம் பின்னால் சென்றேன், மும்பைக்கு நான் புதியவன், இந்தி தெரியாது. வேலைக்கு புதியவன் என்பதால் மும்பைக்கு மாற்றலாக்கி விட்டார்கள். இனம் புரியாத பயம், மிரட்சி எப்போதும்.

திடீர் என ஒரு போன், வாடிக்கையாளர் இடத்தில இருக்கும் ஒரு உள்ளூர் என்ஜிநீயருக்கு உதவ வேண்டும் என்று முகவரி கொடுத்து போக சொன்னார்கள். ஆட்டோ பிடித்தேன், முகவரி சொன்னேன், அறுவது ருபாய் சொன்னான், பதினைந்து நிமிடத்தில் சரியாக சேர்ப்பித்தான், இரண்டு மணிநேரம் வேலை முடிந்து இருவரும் திரும்பினோம், உள்ளூர்காரர் ஆட்டோ பிடித்தார், அலுவலகம் திரும்பினோம், வெறும் இருவது ரூபாய், நீ ஏமாற்ற பட்டாய் என கேலியாய் சிரித்தார். இந்தி கத்துக்க சொன்னார், எனக்கு ஏனோ வலித்தது, புது ஊர் புது சூழலீல் நான் செயலற்றவனாக பலகீனனாக உணர்ந்தேன்.

எத்தனை பேர், ஆந்திர, மராட்டா, மாபி, உபி என எத்தனையோ பேர் தெரியாத மாநிலங்களில் இருந்தும், அதனுள் உள்ள ஊர்களில் இருந்தும் ஏன் நம் கன்யா குமாரி, ராமநாதபுரம் என எத்தனை பெண்கள் வந்து, அப்பா அம்மா உறவினர் விட்டு சென்னையில் அதிக வாடகை கொடுக்க வேண்டியிருக்கிறார்கள். இவர்கள் வேறு வழி இல்லாமல் ஏமாறுகிறார்கலே தவிர, விரும்பியா கொடுக்கிறார்கள். ஆனால் நாம் சொல்வது, ஆயிரம் ஆயிரமாய் சம்பாதிகிறார்கள், வாடகையை ஏற்றி விடுகிறார்கள் என்று. (இதேபோல் புனேவிலும் நோய்டாவிலும் தென் இந்தியர்கள் ஏமாறுகிறார்கள்)

உண்மையில் நாம் இவர்களை மறைமுகமாய் அடித்து பிடுங்கி விட்டு, ஏமாற்றி விட்டு கவனமாய் அவர்களையே குற்றம் சொல்கிறோம். ஆனால் நாம் இதற்கு வெட்க படுவதே இல்லை.

இவர்களை காட்டி மற்றவர்கள் சம்பாதிகிறார்கள் என்பதே உண்மை. இது தவறு என்றும் சொல்ல முடியவில்லை!

காரணம்! மாற்றங்கள் நிகழும் போது, பல நிகழ்வுகள் நல்லதாகவும் கெட்டதாகவும் பார்க்கப்படும். இதையே நல்ல பார்வையில் வீடு புரோக்கர் வேலை பலவகை பட்ட தொழிலாளர்களுக்கு பகுதி நேரமாக வருவாய் ஈட்டி தந்தது என்பது உண்மை. பல குடும்பங்கள் நன்றாக வாழ்ந்தது என்பது உண்மை

யோசிப்போமா ?

இல்லை இதையும் தாண்டி நாங்கள் குறை சொல்லுவோம் என்றால், நானும் வருகிறேன் உங்களுடன்.

திட்டி தீர்ப்போம் (நாமெல்லாம் என்னக்கி வெட்க பட்டோம்).