Friday, November 6, 2009

தொழில் நுட்ப வளர்ச்சியும் சமூக சீர் கேடுகளும்

இந்த முறை பாண்டிசேரி சென்ற அனுபவம் மறக்க கொஞ்ச நாள் எடுக்கும் என நினைக்கிறேன். என் தூரத்து உறவினரை சந்தித்து பேசிக்கொண்டு இருந்தேன்.

அவர் சமீபத்தில் சென்னையில் இருந்து பாண்டிசேரி குடி பெயர்ந்தவர் (அந்த குடி இல்லை). அவர் கூறிய சில வாசகங்கள்:

" த்தா ...பசங்க வாடகை எல்லாம் ஏத்தி விட்டுடணுவ! மொதல்ல திருவாமூரில் ஆயிரம் ரூவா வாடகையில் இருந்தேன்! ரெண்டாயிரம் யெத்திட்டான்."

" அங்கருந்து போரூர் போனேன். ஒரு வருஷம் தான், நாலாயிரத்து ஐனுருணான்... கூடுவான் சேரி தண்டி போயிட்டேன். அங்கருந்து வேலைக்கி போவனும்! எத்தன வருஷம் தாக்கு புடிக்க? "

"வெலவாசி ஏறி போச்சி, முடியலை பேசாம வூருக்கே போயிடலாமுன்னு வூட்ட கட்டிகினு வூரோட வந்துட்டேன்."

" திடீர்ன்னு தம்மா தூண்டு பசங்க எல்லாம் முப்பதாயிரம் நாப்பதாயிரம் சம்பளம் வாங்கரனுங்க, எங்க இருந்து வரனுங்கன்னே தெரியல! இந்தி பேசறானுங்க, கேட்ட வாடக குடுகறனுங்க, கடசீல நம்ம போழப்புல மன்ன போடரனுங்க ...யா பசங்க" என்றார்

எனக்கு கேட்க ரொம்ப கழ்டமாக இருந்தது! ஒரு வளர்ச்சி எத்தனை ஏழை மக்களை பாதிக்கிறது! பேசவும் சங்கடமாக இருந்தது, ஆனாலும் பேச்சு தொடர்ந்தது , குடும்பத்தை பற்றி கேட்டேன், பிறகு சம்பாதிப்பது பற்றி திரும்பியது,

" எண்ணாங்க பண்றது எல்லாம் புரோக்கர் பண்ற வேலை! "

ஊரு தெரியாத பசங்கள நல்ல ஏமாத்தி வாடகைய ஏத்தி காமிச்சி, நல்லா கமிசன் பார்த்தாங்க! வூட்டு காரங்களும் காசு வருதுன்னு, இதுக்கு தோன போணாங்க!

"மெக்காநிக்கி, டைலறு ஏன் வுட்டு வேல செயிரவுங்க கூட சம்பாரிசாங்க பா"

அவர் தலையை ஆடினார், நான் விடாமல் தொடர்ந்தேன்

" எனக்கு தெரிந்து ஒரு அம்மா பல வருடம் வேளச்சேரியில் வீடு வேலை செய்தவர்கள், ரெண்டு வருசத்துல வீடு ப்ரோகரா நல்லா சம்பாரிசாங்க!

சொந்தமா வீடு கட்டி செங்கல்பட்டுல எடம் வாங்கி ஸ்கூடில போறாங்க இப்போ! உண்மையிலேயே அசந்துட்டேன்!

இன்னா காசு போரண்டுச்சு, அது தான் டைம், சூப்பரா சம்பாரிசாங்க " என்றேன்

அவர் " நான் கூட போன வருடம் ட்ரைவர் வேலைய விட்டுட்டு இரங்கினேன், அப்புறம் தான் பேருங்களதூரில் எடம் வாங்கி போட்டுடு, தோ ஊரோட வூட்ட கட்டிகினு வந்துட்டேன்" என்றார்.

அவர் முகத்தில், தானும் வெவரமாநவன் என்ற பெருமிதம் இருந்தது(நான் எதிர் பார்த்து இதை தான்),

மீண்டும் ரியல் எஸ்டேட் மேலே வராதா என்று ட்ரைவர் வேலைக்கும் போகாமல் காத்துக்கொண்டு இருக்கிறார். நிலம் பத்திரம் கமிஷன் என்ருதான் அவர் பேச்சு இருந்தது.

ரியல் எஸ்டேட் அடங்கியதால் தற்போது ஊரோடு இருக்கிறார் என்பது புரிந்தது.
பிறகு பேச்சை மாற்றி ஏதேதோ பேசினேன்,

ஆனால் மனதில் பத்து வருடம் பின்னால் சென்றேன், மும்பைக்கு நான் புதியவன், இந்தி தெரியாது. வேலைக்கு புதியவன் என்பதால் மும்பைக்கு மாற்றலாக்கி விட்டார்கள். இனம் புரியாத பயம், மிரட்சி எப்போதும்.

திடீர் என ஒரு போன், வாடிக்கையாளர் இடத்தில இருக்கும் ஒரு உள்ளூர் என்ஜிநீயருக்கு உதவ வேண்டும் என்று முகவரி கொடுத்து போக சொன்னார்கள். ஆட்டோ பிடித்தேன், முகவரி சொன்னேன், அறுவது ருபாய் சொன்னான், பதினைந்து நிமிடத்தில் சரியாக சேர்ப்பித்தான், இரண்டு மணிநேரம் வேலை முடிந்து இருவரும் திரும்பினோம், உள்ளூர்காரர் ஆட்டோ பிடித்தார், அலுவலகம் திரும்பினோம், வெறும் இருவது ரூபாய், நீ ஏமாற்ற பட்டாய் என கேலியாய் சிரித்தார். இந்தி கத்துக்க சொன்னார், எனக்கு ஏனோ வலித்தது, புது ஊர் புது சூழலீல் நான் செயலற்றவனாக பலகீனனாக உணர்ந்தேன்.

எத்தனை பேர், ஆந்திர, மராட்டா, மாபி, உபி என எத்தனையோ பேர் தெரியாத மாநிலங்களில் இருந்தும், அதனுள் உள்ள ஊர்களில் இருந்தும் ஏன் நம் கன்யா குமாரி, ராமநாதபுரம் என எத்தனை பெண்கள் வந்து, அப்பா அம்மா உறவினர் விட்டு சென்னையில் அதிக வாடகை கொடுக்க வேண்டியிருக்கிறார்கள். இவர்கள் வேறு வழி இல்லாமல் ஏமாறுகிறார்கலே தவிர, விரும்பியா கொடுக்கிறார்கள். ஆனால் நாம் சொல்வது, ஆயிரம் ஆயிரமாய் சம்பாதிகிறார்கள், வாடகையை ஏற்றி விடுகிறார்கள் என்று. (இதேபோல் புனேவிலும் நோய்டாவிலும் தென் இந்தியர்கள் ஏமாறுகிறார்கள்)

உண்மையில் நாம் இவர்களை மறைமுகமாய் அடித்து பிடுங்கி விட்டு, ஏமாற்றி விட்டு கவனமாய் அவர்களையே குற்றம் சொல்கிறோம். ஆனால் நாம் இதற்கு வெட்க படுவதே இல்லை.

இவர்களை காட்டி மற்றவர்கள் சம்பாதிகிறார்கள் என்பதே உண்மை. இது தவறு என்றும் சொல்ல முடியவில்லை!

காரணம்! மாற்றங்கள் நிகழும் போது, பல நிகழ்வுகள் நல்லதாகவும் கெட்டதாகவும் பார்க்கப்படும். இதையே நல்ல பார்வையில் வீடு புரோக்கர் வேலை பலவகை பட்ட தொழிலாளர்களுக்கு பகுதி நேரமாக வருவாய் ஈட்டி தந்தது என்பது உண்மை. பல குடும்பங்கள் நன்றாக வாழ்ந்தது என்பது உண்மை

யோசிப்போமா ?

இல்லை இதையும் தாண்டி நாங்கள் குறை சொல்லுவோம் என்றால், நானும் வருகிறேன் உங்களுடன்.

திட்டி தீர்ப்போம் (நாமெல்லாம் என்னக்கி வெட்க பட்டோம்).

3 comments:

anandam said...

mind blowing

Jackiesekar said...

நல்லா எழுதி இருக்கிங்க... அதே போல் அந்த வேர்டு வேரிபிகேஷனை எடுத்து விடுங்க..

Valmeegy said...

நன்றி ஜாக்கி, வேர்ட் வேரிபிகாசன் எடுத்துட்டேன்.