Friday, April 6, 2012

மக்கு மணிவண்ணன்


இந்தா போட்டோல இருக்குறவன உங்க யாருகாவது தெரியுமா ? நல்ல கேள்வி... எனக்கே தெரியாத போது உங்கள கேக்குறது ஞயாயம் இல்லை தான்
இருந்தாலும் கேக்குறேன்...

தெரியாது சரி ஒத்துக்குறேன்... ப்ளாகுல போட்டோ போடற அளவுக்கு இவரு பெரிய ஆளா ? இல்ல சப்ப மேட்ரு தான்.. அப்ப எதுக்கு இவருக்கு வெளம்பரம்

கேக்கணுமுல்ல, கேக்கணுமுல்ல, சரி சொலுறேன் , இவரு சாதா மேட்டருதான் ஆனா இப்போ ஸ்பெஷல் சாதா ஆயிட்டாரு எப்புடி ?

அதாவது நாம எல்லாமே சாதா மேட்டருதான், அப்படி இருக்குறப்போ இவரு மட்டும் தற்கொல பண்ணிக்கிட்டு ஸ்பெஷல் சாதா ஆயிட்டாரு

ஒடனே கேள்வி வருமே ... ஏன் தற்கொல பண்ணிகிட்டாறு ?

அட ஏனப்பா நீ வெவரமே புரியாம... ஒரு பையன் இருவதியாறு பாடத்துல பெயில் ஆனா தற்கொல பண்ணிக்காம சந்தோசமா சுத்தியா  வர முடியும்  ?
( நாம எல்லாம் எப்புடி எப்புடி எல்லாம் பெயில் ஆகி இருக்கோம் என்னென்ன மாதிரி எல்லாம் பெயில் ஆகியிருக்கோம், இந்த புள்ள நம்மளயெல்லாம் பாத்ததே இல்ல போல  )
 அதுலயும் இந்தியாவின் மிக சிறந்த பல்கலை கழகத்துல படிச்சிட்டு பெயில் ஆனா தற்கொல பண்ணிக்காம  என்ன பண்றது.

அதாவது மக்களே இந்த மக்கு மணிவண்ணன் அண்ணா யுனிவெர்சிட்டி இல்ல அண்ணா யுனிவெர்சிட்டி அதுல மூணாப்பு படிக்கிறானாம் (அதாம்பா  மூணாவது வருஷம் )
அதுல இருவதியாறு பாடத்துல பெயில், இந்த மக்கு பசங்க எல்லாம் இருந்தா என்ன இல்லாம போனா என்ன. இப்புடி பட்ட மக்கு பசங்க எல்லாம் எதுக்கு  அண்ணா யுனிவெர்சிட்டி மாதிரி
பெரிய படிப்பு படிக்கிற எடத்துக்கு எல்லாம் வராங்க, அண்ணா யுனிவெர்சிட்டி, ஐ ஐ டி,  ஐ ஐ எம் ஐ ஐ எஸ் சி எல்லாம் இந்த மாதிரி மக்கு பசங்க படிக்கவ கட்டி வெச்சி இருக்கு

அதுக்குன்னு  புத்திசாலி பசங்க தனியா இருக்குறாங்க அவுங்கள தயார் பண்றதுக்குன்னே தனியா பள்ளி கூடம் இருக்கு... இப்படி இருக்குறப்போ இந்த மக்கு மணிவண்ணன் எல்லாம்
தேவையில்லாம வந்து சீட்ட புடிச்சா என்ன ஆவும், பேராச புடிச்சா இப்புடி தான் ஆவும்...

நான் தெரியாம தான் கேக்குறேன் இவனுக்கு எல்லாம் எதுக்கு இன்ஜினியரிங் படிப்பு ஒரு பி எ வோ ஒரு பி கா மோ படிச்சிட்டு குமாஸ்தா வேலக்கி போகம எதுக்கு இன்ஜினியரிங் படிப்பு.

நீ தமிழ்ல தானே படிச்சே... தமிழ்ல தானே படிச்சே அப்போ குமாஸ்தா வேலைக்கோ வாத்தியார் வேலைக்கோ தானே போகணும். எதுக்கு மெட்ரிக் குலேசன் சி பி எஸ் இ படிச்சா மாதிரி இஞ்சினீர்  ஆவனமுன்னு கனவு.
(எனக்கு தெரிஞ்சி " கோ இன் சயிட் லேடீஸ் ஆர் அவைலபெல் " அப்புடின்னு சொன்ன எச் ஒ டி யா பாத்து அசந்து போயிருக்கேன், நாங்க பேசாம உள்ள போயிட்டோம் அப்புறம் விசாரிச்சப்ப தான் தெரிஞ்சிது
பொம்பள பசங்க எல்லாம் கிளாசுல இருக்கப்போ ஆம்புள பசங்க ஏன் வெளிய நிக்கிறிங்க உள்ள போங்கன்னு சொன்னாராம், அதுக்காக  அவுரு படிச்ச பி டேக் எம் பில் தப்புன்னோ பாடத்துல அவரு மக்குன்னோ சொல்ல மாட்டேன், அவருக்கு இங்கிலீசு தெரியலை அவளோதான் )

ஏங்க நான் கேக்குறது தப்பா? இந்த பையன் மணிவண்ணன் எங்கியோ தர்ம புரில ஒரு எழபட்ட வீட்டுல பொறந்து தமிழ் மீடியம் ஸ்கூலுல படிச்சி வந்துருக்காம்.

அங்க என்ன இன்ஜினியரிங் காலேஜி மாதிரி இங்கிலீசுலய சொல்லி குடுக்குறாங்க... இல்ல எட்டாப்பு படிக்கும் போதே ப்ரோஜெக்டு வோருக்கு குடுக்குராகளா...

பத்தாப்பு பாடத்த ஓம்பதாவுலியே முடிச்சி பத்தாப்பு பூரா வெறும் டெஸ்டு வெச்சி பிளஸ் டூ பரிச்சைக்கு பிளஸ் ஒன் லையே பாடத்த முடிச்சி எம்புட்டு கழ்டபட்டு பசங்கள தயார் பண்றாங்க...
அதுக்கு எம்புட்டு செலவாவுது... பன்னண்டு மாச படிப்ப இருவத்தி ரெண்டு மாசமா இழுத்து பசங்க எல்லாத்தையுமே தொன்னுருக்கு மேல வாங்க வெச்சி ஆயிர கணக்குல பீசு வாங்கி...

இப்புடி எதுவுமே பண்ணாம நீ பாட்டுக்கு கிராமத்து ஸ்கூலுல படிச்சிட்டு திடீருன்னு வந்து  இன்ஜினியரிங் காலேஜில குதிச்சா இப்புடித்தான் ஆவும்.

கூட படிக்கிற பசங்க கூட இங்கிலீசுல பேசவும் முடியாது, ப்ரஜக்டு வோருக்கு இன்னா என்னன்னும் தெரியாது ஆனா ஆறுமாசத்துல ஆறு பேப்பர் எக்சாமுன்னா இப்புடித்தான் இருவதியாறு பாடத்துல பெயில் ஆகா வேண்டி இருக்கும்...

உன்னோட மக்கு மரமண்டைக்கு இன்ஜினியரிங் காலேஜி சேந்த பொறவுதான் இது எல்லாம் புரிஞ்சா அது யாரு தப்பு ?

எல் கே ஜி அட்மிசன் பீசு தெரியுமா உனுக்கு... உங்க அப்ப அம்மா எக்ஸாமு எழுதி இருக்கங்களா ( நீ படிக்க )... லட்ச கணக்குல பீசு கட்டியிருக்கியா...

இன்ஜினியரிங் டாக்குடரு படிப்ப எல்லாம் அப்பவே ஆரம்பிச்சி இருக்கணும்... இல்லையா ஏதோ ஒரு மூணா வானா காலேஜில போயி பேருக்கு இன்ஜினியரிங் படிச்சி இருக்கணும்

அதெல்லாம் விட்டு போட்டு மகா புத்தி சாலிகள் உருவாகுறதா இந்திய பூரா சொல்லுறாங்களே  அந்த எடத்துக்கு எல்லாம் உன்ன யாரு வர சொன்னா ?

என்னா என்னா கேட்ட? அப்போ பன்னண்டு வருசமா நீ படிச்சது என்னன்னா ?

ஸ்டேட்டு போர்டு படிப்புக்கும் இதுக்கும் ஏன் இவ்வளோ வித்தியசமுன்னா... ஆதஏன் என்ன கேக்க ? ஆதஏன்ல  என்ன கேக்க ?

ஏன் எல்லோருக்கும் சமமான படிப்பு ஸ்கூல்லயே இருக்க கூடாதுன்னா ? ஆதஏன்ல  என்ன கேக்க ?

பிளஸ் டூல  1156 மார்க்கு ஸ்டேட்டுல பதிமூனா ரேஞ்க்கு எடுத்தும் இன்ஜினியரிங் படிக்க முடியலேன்னா ஏன்ல என்ன கேக்க ?

எதுக்கு ஸ்டேட் போர்டு, சென்ட்ரல் போர்டு, மெட்ரிக் குலேசன் தமிழ் மீடியம் இங்கிலீஸ் மீடியம்ன்னு தனி தனியா ?
எல்லாருக்கும் ஒரே படிப்பு வெச்சா நா எதுக்கு தற்கொல பண்ணிக்கனும் ? கரக்டு..... ஆதஏன்ல  என்ன கேக்க ?

சமசீர் கல்வி .... நிறுத்து நிறுத்து என்ன வார்த்த சொன்ன..

நாங்க எல்லாம் அப்புடி தான் எல்லாத்தையும் தனி தனியா தான் வெச்சிருப்போம், தனி தனியா பீசு வாங்குவோம்

படிக்கும் போதே நீ ஏழ, அவன் பணக்காரன், நீ தமிழு அவன் இங்கிலீசு அப்பிடின்னு பிரிச்சி வெப்போம், என்னா பண்ணுவ ?

ஒவ்வொரு  வருசமும் ஐ ஐ டி,  ஐ ஐ எம் ஐ ஐ எஸ் சி ல உன்ன மாதிரி எத்தன பசங்க தற்கொல பண்ணிகிரனுங்க தெரியுமா

எந்த சேனலோ பேப்பரோ மீடியவோ இத ரொம்ப முக்கியமுன்னு அக்கறையா விவாதிச்சி இருக்கங்களா

பன்னிரெண்டாம் வகுப்பு வரை புத்தி சாலி என்று அறியப்பட்ட மாணவன் பட்டபடிப்பில் இருவத்தி மூன்று பாடத்தில் பெயில் ஆகி தற்கொலை செய்து கொண்டாரென்றால்

பண வெறி பிடித்த பாகுபாடான இந்த சமூகத்தில் வாழ நான் உண்மையில் வெட்க படுகிறேன்.....

இறந்து போனவர் தனிமனிதர் அல்ல இன்று படித்து முன்னேற துடிக்கும் ஒவ்வொரு மாணவரின் நிழல்

இந்த பதிவில் தவறான வார்த்தைகளால் நான் திட்டியது மணிவண்ணனை அல்ல என்னையும் சேர்த்து இந்த சமூகத்தை....

கையாலாகாத என்னை போன்ற சமூக அடிமைகளெல்லாம்  இப்படி எழுதுவதை தவிர வேறு என்ன பெரிதாய் புடிங்கி விட முடியும்...

இது வரை இறந்து போன மணிவண்ணன்களுக்கு என்  கண்ணீர் அஞ்சலிகள்