Friday, June 26, 2009

உலகம் எங்களை தூற்றுதும்

உலகம் எங்களை தூற்றுதும்!

எங்கள் உயிருக்கு போராடுவதால் நங்கள் போராளிகள் !
தொலைந்த உறவுகளை தீவிரமாய் தேடுவதால் தீவிரவாதிகள் !
ஆயுதம் ஏந்தி போரடுவதாய் கூறி,
உலகம் கண்களை மூடிக்கொண்டது !

இப்போது எங்களை அழிக்க ஆயுதங்களுடன் !

உலகம் எங்களை தூற்றுதும் !

போர் ஆயுதங்கள் எங்களை துரத்த
உறவுகள் கை பிடித்து ஓடினோம் !
வீழ்ந்து வெடித்த எறிகணையில்
என் கை பிடித்த மனைவியை காணவில்லை, என் கைகளுடன் !

உலகம் எங்களை தூற்றுதும் !

கதறி அழுத கூட்டம் சிதறி ஓடியது
மற்றொரு எறிகணை வெடிப்பில் !
எனக்கும் ஏழு வயதில் ஒரு மகன் இருந்தான் !

உலகம் எங்களை தூற்றுதும் !

கொடூர பயம் கொடுத்த ஒலிகள்லேல்லாம் கணத்தில்
நின்று போய் ஓங்காரம் மட்டும் என் செவியில் !
உக்கிரமாய் நடக்கும் உழியாட்டம்,
மவுன படமாய் எனக்கு மட்டும் !
என் செவிப்பறை கிழிந்து இருந்தது !

உலகம் எங்களை தூற்றுதும் !

எழுந்தோட என் உள்ளம் முயல்கையில்
நான் அறிந்தேன் என் கால்கள் இரண்டும் காணமல் போனதை !
உடல் எரிந்தது உப்பு காற்றில்,
உயிர் உருகியது கடற் கரை மணலில் !

உலகம் எங்களை தூற்றுதும் !

இது என் பூமி !
நான் இங்குதான் இறந்தேன் !
மீண்டும் மீண்டும் கால காலமாய் போராடி போராடி!
நான் இங்குதான் இறந்தேன் !

கால சக்கரம் ஓரிடத்தில் நிற்பதில்லை என்றும் !
இன்று நீ நிற்கும் இடத்தில ஒருநாள் நான் !
அழுகையும் கதறலும் என் செவியில் !
பகை முடிப்போம் !

உலகம் எங்களை தூற்றுதும் !
மறுபடியும்

1 comment:

அகலிக‌ன் said...

"இன்று நீ நிற்கும் இடத்தில ஒருநாள் நான் !
அழுகையும் கதறலும் என் செவியில் !
பகை முடிப்போம்"

நிச்சயம் நடக்கும் "போராளிகள் புதைக்கப்படுவதில்லை அவர்கள் மண்ணில் விதைக்கப்படுகிறார்கள்" பிரபாகரன்.